தமிழகத்தின் புராண பிரசித்தி பெற்ற புண்ணிய நகரங்களில் ஒன்றான நாமக்கல் மாவட்டம், நாமக்கல் நகரில் நடுநாயகமாக திகழும் நாமகிரி மலைக்குன்றில், கி.பி.7ம் நூற்றாண்டில் அதியன் ஆட்சியாளர்களால் குடையப்பட்ட குடவரைக்கோயிலாக அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோயில் அமையப்பெற்றுள்ளது. இப்பர்வத மலையின் கீழ்ப்புறம் அருள்மிகு அரங்கநாதர் கார்கோடக சயனத்தில் காட்சியளிக்கிறார். அவர் அருகிலேயே கிழக்கு நோக்கிய தனி சந்நதியில் அருள்மிகு அரங்கநாயகி தாயார் அருள்பாலிக்கிறார். மலையின் மேற்புறம் அருள்மிகு நரசிம்மசுவாமி அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறார். இங்கு அருள்மிகு நாமகிரி தாயார் கிழக்கு நோக்கி பக்தர்களுக்கு அருள்புரிகின்றார். இங்குள்ள அருள்மிகு நரசிம்மர், அருள்மிகு வைகுண்ட நாராயண, இரண்யசம்கார மூர்த்தி அருள்மிகு வராகமூர்த்தி ஆகியவை அழகிய சிற்பவேலைபாடுகள் அமைந்தவை. கோட்டை பகுதியில் சாளக்கிராம பர்வத மலையில் குடையப்பெற்ற அருள்மிகு...