Screen Reader Access     A-AA+
அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயில், நாமக்கல் பேருந்து நிலையம் அருகில், நாமக்கல் - 637001, நாமக்கல் .
Arulmigu Narasimaswamy Temple, Near Bus Stand, Namakkal - 637001, Namakkal District [TM004887]
×
Temple History

தல வரலாறு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமக்கல் நகர் அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயில் மற்றும் இரங்கநாதர் திருக்கோவில் ஆகிய இரண்டும் குகை கோவில்கள் ஆகும். இந்த குகை கோவில்கள் விஸ்வகர்மாவால் ( தெய்வீக ஆசாரி) கட்டப்பட்டவை என்று புராணம் கூறுகிறது. கட்டப்பட்டவை என்று புராணம் கூறுகிறது. ஆனால் இந்திய தொல்லியல் துறை இக்குகை கோவில் அதியன் (அதியா) ஆட்சியாளர்களால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த குகை சிற்பங்கள் ஏழாம் நூற்றாண்டில் அதியன் குல மன்னன் குணசீலாவால் செதுக்கப்பட்டவை என கூறப்படுகிறது. இந்த குகை சிற்பங்கள் 7-ஆம் நூற்றாண்டில் அதியன் குல மன்னன் குணசிலவால் செதுக்கப்பட்டவை. இக்குகை கோயில்கள் வேறு எங்கும் ஒப்பிடத்தக்க வகையில் இல்லாமல் தன்னகத்தே பெரிய அடித்தளச் சிற்பங்களையும் உயிர்சக்தியையும் மற்றும் அனைத்தும் இயற்கை...

தல பெருமை

ஸ்ரீ மகாலட்சுமி ஸ்ரீசைலம் என்னும் சேத்ரத்தில் (நாமகிரி- நாமக்கல் ) கமலாலய என்னும் குளத்தில் பெருமாளின் நரசிம்ம அவதாரத்தை தரிசிக்க கடுந்தவம் புரிந்து வந்தாள். இக்கால கட்டத்தில் ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை மீண்டும் இருந்த இடத்திலேயே இமயமலையில் வைத்துவிட்டு நேபாளத்தில் கண்டகி எனும் நதியில் நீராடும் பொழுது எம்பெருமானின் திருஉருவாகிய சாளக்கிராமம் (திருமூர்த்தி) கிடைக்கப்பெற்றார். அதில் நரசிம்மமூர்த்தி ஆர்ப்பவித்திருப்பதை பார்த்து ஆச்சரியம் அடைந்தார். சாளக்கிராமத்தை எடுத்து கொண்டு இலங்கையை நோக்கி தாவிப் பறந்தார். சூரிய உதயம் வருகையை அறிந்து அனுட்டானம் செய்ய மகாலட்சுமி தவம் செய்யும் ஸ்ரீசைல சேத்திரத்தில் உள்ள கமலாலய குளக்கரையில் இறங்கினார். சாள கிராமத்தை குளக்கரையில் வைத்து விட்டு அனுட்டானத்தை முடித்து விட்டு திரும்ப வந்து சாள கிராமத்தை...